Thursday 6 February 2014

தேவையானதை தேடி பெறுதல் வேண்டும்


தேர்வில் எதிர்ப்பு சக்தி வளர
தேவையான் அறிவு வேண்டும்

தேவையற்ற பயம் குறைய
தேவையான மன வலிமை வேண்டும்

தேவையான மன வலிமை பெற
தேவையான இறை பக்தி வேண்டும்

தேவையான மகிழ்ச்சி பெற
தேவையான பாச மனம்  வேண்டும்

தேவையான பாச மனம் பெற
தேவையான மனித உறவு வேண்டும்

எதிர்ப்பு சக்தி வளர
உடலில் வலிமை  வேண்டும்
உடல் நலமாக இருக்க நல்ல சிந்தனையும்
முறையான உணவும் ,தேவையான தூக்கமும்,உடற்பயிற்சியும் தேவை
உடல் வலி ஒரு வியாதியல்ல
வலி வியாதியின் அறிகுறி அல்லது அதிக உழைப்பினால் வந்ததாக இருக்கலாம்

உடல் நலம் குறைய
உடன் தேவையற்ற மருந்தை  மருத்துவரை அணுகாமல்
நாமே மருந்துக் கடையில் வாங்கி சாப்பிடுவது முறையற்றது
அவசியமின்றி அண்டி பயாடிக் மருந்து உண்பது பாதிப்பை தரும்
வளர்ச்சி  அடைந்த நாட்டில் மருத்துவர்கள் அண்டி பயாடிக் மருந்தை அவசியமின்றி தரமாட்டார்கள்
அவசியமின்றி உடன் உடல் நலமாக வேண்டுமென்று தொடர்ந்து அண்டி பயாடிக் எடுத்துக் கொள்வது  நன்மை தராது அது நாளடைவில் கெடுதல் தரும்.
சிலருக்கு சில  அண்டி பயாடிக் மருந்து ஒவ்வாமை கொடுத்து பாதிப்பை தந்து விடும்

No comments:

Post a Comment