Wednesday 19 February 2014

உன் சிரமத்தை எங்களுக்கும் கொடுத்து விட்டாயே !

கிடைத்த வேலையை ஏன் விட்டாய் ?
வேலை சிரமமாக இருந்தது அதனால் விட்டேன்
அதை விட வேலை செய்யாததால் பணம் இல்லாமல்,வருமானம் கிடைக்காததால் உன்னோடு நாங்களும் சிரமப் படப் போகின்றோம்
உன் சிரமத்தை எங்களுக்கும் கொடுத்து விட்டாயே !

- வயதான பெற்றோர்



நீங்கள் சிரமத்தைப் பற்றி நினைக்கிறீர்கள் . சிரமப்பட்டு மனம் அமைதியின்றி  வேலையில் ஈடுபட்டால் வேலையில் தவறு நிகழ்ந்து விடும் மற்றும் எனது உடல் நலமும் கெட்டுவிடும் .நான் என்னோடு  உங்களையும் பாதுகாத்துக் கொள்ள விரைவில் நல்ல வேலையில் அமர்ந்து விடுவேன்.அது வரை பொறுமையுடன் சிரமத்தை ஏற்றுக் கொள்ளுங்கள்.
நீற்றில் விழுந்தவனை காப்பாற்ற காப்பாற்ற முயல்பவன் நீச்சல் தெரிந்திருக்க வேண்டும்.இல்லையென்றால் இருவருக்குமே ஆபத்து நேர உயிர் போகும் நிலை ஏற்பட்டு விடும் .

-தந்தைக்கு ஆறுதல் சொல்லும் அன்பு மகன் 



1 comment:

  1. ஆறுதல் வார்த்தைகளும் எடிசனின் சிறப்பும் அருமை...

    ReplyDelete