Wednesday, 12 February 2014

உயர்வு இருப்பின் மற்றவர்களும் அந்த கொள்கையை நேசித்து இணைவார்கள்

இறைவன் ஒருவருக்கு ஒரு வழி காட்ட
அவர் தனக்கென அவவழியை தொடர்கிறார்
நம்பிக்கை தனியொரு மனிதனின் உரிமை .

ஒரு உயர்வழியை
ஒருவர் பின்பற்ற
மற்றவர் அவரை அல்லது
அவர் பின்பற்றிய வழியை திட்டினால்

திட்டுபவர்கள் திட்டட்டும் .
திட்டுவதனால் திட்டுபவர்களுக்கு தீமை
திட்டப்படுபவர்கள் நேர்மைமையானவர்களாக இருப்பின்
திட்டப்படுபவர்களுக்கு நன்மைகள் சேர
திட்டப்படுபவர்களைப் பற்றி மற்றவர்களும் அறிய
திட்டப்படுபவர்களின் கொள்கை பிடிப்பில்
உயர்வு இருப்பின் மற்றவர்களும் அந்த கொள்கையை நேசித்து இணைவார்கள்
தேவையற்று ஒருவரை அல்லது ஒரு சமூகத்தை
திட்டுவதால் அவர்களுக்குள்(திட்டப்பட்டவர்களுக்குள் )
ஒற்றுமையும் வலிமையும் வருவது உண்டு .
அனைத்தும் நன்மைக்கே
----------------------------------------------------
யுவன் சங்கர் ராஜாவை
இஸ்லாத்தை விரும்பி வந்ததை பலரும் பாராட்ட
அவரை பாராட்டும் நோக்கம் உயர்வாக இருக்க
சில காலம் கழித்து
அவரது தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்காமல்
அவரை ஒரு பிரிவுக்குள் உள்ளடக்காமல் இருப்பது உயர்வு
(இஸ்லாத்தில் பிரிவு கிடையாது )

அவரது இசை ஆர்வத்தை குறைக்க விரும்பினால்
அவர் பாரிசுக்கு போய் சேவை  செய்ய ஆரம்பித்து விடுவார்

இறைவன் அவருக்கு நல்வழி காட்ட
அவர் தனக்கென (இஸ்லாம்) ஒரு வழியை தொடர்கிறார்
என்ற நினைவோடு இருப்போம்

மனம் ஈர்ப்பு விசை
மனம் மனிதனை  வசப்படுத்தி விட்டது

படைத்தவனுக்கும் படைக்கப் பட்டவனுக்கும்
தரகர் இல்லை தடை இல்லை

இறைவன் அனைவருக்கும்  அமைதியையும்
சமாதானத்தையும் வழங்குவானாக..

No comments:

Post a Comment