Monday 3 February 2014

நீ வேண்டும் எனக்கு

நீ வேண்டும் எனக்கு
நான் வேண்டும் உனக்கு
நமக்குள் ஆயிரம் பிரச்சனை வர வேண்டும்
நமது பிரச்சனையை நாமே தீர்த்துக் கொள்ள வேண்டும்

நமக்குள் உள்ளதை வெளியே சொன்னால்
நமது பிரச்சனையை தீர்க்க வருவதாக சொல்லி வந்தவர்
நம்மை பிரித்து வைத்து மனதுக்குள் மகிழ்ந்து செல்வார்

'சாட்சிக்காரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் காலில் விழு' என்று சொல்வது பிரச்சனை வந்தால் ஒருவர் விட்டுக் கொடுத்தால் அனைத்தும் நல்லதாகி ஒற்றுமை கிடைத்து விடும் என்பதுதான்
------------------------------------------------

பணம் கொடுத்தால் வக்கீல் வாதாட வருவார்
காசு கொடுத்தால் பொய் சாட்சி சொல்லவும் வருவார்
நோட்டு கொடுத்தால் தேவையான தீர்ப்பும் கிடைக்கும்

வாதம் செய்யவும்
விவாதம் செய்யவும்
கிண்டல் செய்யவும்
அவதூறு செய்யவும்
அழைக்காமலேயே
பணம் பெறாமலேயே
பலர் வருவார்

1 comment: