Thursday 27 February 2014

யாசித்தல் இறைவனிடம் மட்டும்



நினைத்தது நிதர்சனம் ,
மறைக்கமுடியாத வாழ்க்கை ,
செயலில் வெளிப்படையானது;
மனதில் தெளிவானது;
கண்டவை கண்கூடு;
ஆற்றியவை அப்பட்டமானது ;
யாசகம் கேட்காத யதார்த்தம்
யாசித்தல் இறைவனிடம் மட்டும்
கடுகளவும் கபடமில்லை ,
படைத்தவனின் படைப்பை அறிந்து
ஆற்றியதில் துடிப்பு
பயன்படுத்தும் ஆர்வம் ,
தொடர்ந்து தொழுது வர நேசம் .
வாழ்வை நேசிப்பது .

பார்க்குமிடமெல்லாம் மகிழ்வு ,
செய்வதெல்லாம் சிறப்பு.
வாழ்வே உந்துதல் தரும் சக்தி.

2 comments:

  1. அருமையாகவும் முடித்துள்ளீர்கள்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. சலாம். நிறைவான தெளிவான சிந்தனை. நாமும் யாசிப்போம் அல்லஹ்விடம்

    ReplyDelete