Monday, 30 December 2013

நிர்ப்பந்ததின் கோளாறால் துன்புறுதல்

நிர்ப்பந்ததின் கோளாறால் துன்புறுதல்
(கற்பனை கோளாறுகள் )

சுத்தம்

சுத்தமாக இருப்பதில் கடுமை
சுத்தமாக இருக்கிறதா என்பதில் உன்னிப்பாக கவனித்தல்
சுத்தம் சீரான முறையில் கையாளப் பட்டதா என்பதில் கவனம்

தன்னிலை வேலையில் சந்தேகம்

வீட்டின் கதவு சரியாக பூட்டப் பட்டதா
கையை முறையாக கழுகாமல் விட்டு விட்டேனா
ஆயத்தத்தில் எதையாவது தவற விட்டு விட்டேனா
இறை வணக்கத்தில் தவறு நிகழ்ந்து விட்டதா

Sunday, 29 December 2013

'நானும்தான் தினமும் ஆக்கிப் போடறேன். ..

'பாங்கு சொல்லிட்டாங்க . ஜும்மாவுக்கு போய் ஹஜ்ரத் ஹதீஸ் சொல்வார் போய் கேள் .சீக்கிரம் கிளம்பு '
-தாய்

'ஒவ்வொரு வாரமும் தான் ஹதீஸ் சொல்கிறார் .நான் கேட்கிறேன். மனதில் நிற்காமல் மறந்து விடுகிறதே. பின் ஏன் அவசரப் படுத்துகிறாய்.'
-மகன்

'நானும்தான் தினமும் ஆக்கிப் போடறேன். நல்லா உண்கிறாய் அது உன் வயிரிலேயே இருந்துக் கொண்டேவா இருக்கு. அந்த உணவுதான் உன்னை உயிர் வாழ வைக்கிறது .அதுபோல் தான் . அந்த ஜூம்மா பேருரைகளும்,சொற்பொழிவுகளும், .அது உன்னை அறியாமலேயே உன்னை உயர்வடையச் செய்யும்.உனக்கு நன்மையை கொண்டு வந்து சேர்க்கும். அதன் அருமை உனக்கு இப்போது விளங்காமல் போகலாம். ஆனால் உன் உள் மனதில் உறைந்து நிற்பதனை காலம் வரும்போது நீ அறிவாய். '
-தாய்

பயணத்தில் பார்வை

பயணத்தில் எழைகளின் எளிய வாழ்வை பார்த்து அறிந்தது
பயணம் இனிய முறையில் முடிந்தது
பயணத்தில் கண்டது மகிழ்வைத் தந்தது
பயணம் அறிவைத் தந்தது

நம் வீட்டில் ஒரு பூனை
ஏழை வீட்டில் நான்கு பூனைகள்

நம் தோட்டத்தில் ஒரு குளம்
ஏழையின் வீட்டின் அருகில் நீர் நிற்காத ஒரு சிற்றோடை

நம் தோட்டத்தில் விளக்கு வெளிச்சம் காட்டுகிறது
ஏழை வீட்டின் கொள்ளையில் நிலாவும் நட்சத்திரங்களும் ஒளி தருகின்றன

நம் தோட்டத்தின் பாதுகாப்புக்கு நாற்புறமும் சுவர்கள் மற்றும் காவலர்கள்
ஏழையின் வீட்டில் சேவை ஊழியர்கள்,காவலர்கள் இல்லை
ஏழையின் வீட்டிற்க்கு உறவினர்களும் நண்பர்களும் பாதுகாவலர்கள்

நம் வீட்டு தலைவாயிலில் வளைவாக செயற்கையாக அமைக்கப்பட்டது 'போர்டிகோ'
ஏழையின் வீட்டின் அடிவானத்தில் அழகுடன் காட்சி தரும் வானவில்

Friday, 27 December 2013

இறையோடு ஒன்றியவர்க்கு இன்பமும் துன்பமும் சமநிலை

மின்னல் போல் மகிழ்வுகள் வரும்
மழை போல் சோகங்கள் கொட்டும்

மின்னலைக் காண விழிகள் மூடும்
மகிழ்வுகள் வர தன்னிலை மறக்கும்

மின்னலும் நீடிப்பதில்லை
மகிழ்வுகளும் நீடிப்பதில்லை

மின்னல் வரும் முன்னே
இடி வரும் பின்னே

Wednesday, 25 December 2013

என் உலகம் ஒளி பெற உங்கள் வரவை வேண்டுகின்றேன் !

நீங்கள் என்னை நேசிக்க
நான் உங்களை நேசிக்காமல் போனதால்
நீங்கள் என்னை விடுத்து போனீர்கள்
நான் வெளிப்படுத்திய செயல்கள்
நான் உருவாக்கிய இழப்பு என்று இப்போது அறிகின்றேன்

நீங்கள் வெளித்தோற்றத்தில் மனத்தைக் கவரவில்லை
நீங்கள் உங்கள் உள்மனதில் கொண்டிருக்கும் நேசத்தினை
உங்கள் மடல், உங்கள் உள்மனதில் கொண்டிருக்கும் நேசத்தினை
என்னை உங்கள் மீது உருவக வழியில் உங்களை நேசிக்க வைக்கிறது
என்னைப் பற்றி நீங்கள் எழுதிய தாள்களை கிழித்ததை ஒன்று சேர்க்கிறேன்
என்னைப் பற்றி நீங்கள் எழுதிய பாடல் , கவிதை மற்றும் உரைநடைகள்
என் மனதை உருக வைத்துள்ளது
என் விழிகள் அருவிபோல் நீரைக் கொட்டுக்கின்றன
திடீரென்று ஒரு பஞ்சம் நாட்டிற்க்கு வந்ததுபோல்
திடீரென்று ஒரு தனிமை உணர்வு எனக்குள் வந்து விட்டது

என் மிதக்கும் மனதில் பெரிதும் அமர்ந்து கொண்டு
உங்கள் உருவம் அசைந்தாடுகிறது
நீங்கள் இல்லாத நிலையில்
என் உலகம் இருண்டதாக இருக்கின்றது
என் உலகம் ஒளி பெற உங்கள் வரவை வேண்டுகின்றேன்

Monday, 23 December 2013

நான் உன் பார்வையில் இல்லாமல் இல்லை!

இறைவா எனக்கு மன்னிப்பை வழங்கிடு
நிறைவாய் நான் உன்னை பிரார்த்தித்து இறைஞ்சுகிறேன்

நான் என் வாழ்நாட்களில் நல்லது செய்யவில்லை
நான் உன்னை நினையாமல் நல்லது செய்ய விடுத்தேன்
நான் வேண்டுமென்றே அனைத்தும் செய்யவில்லை
நான் செய்தவைகள் அறிந்தும் அறியாமலும் செய்தவைகள்
நான் செய்தவைகள் அனைத்தும் நீ அறிந்துக் கொள்வாய் என அறியாமல் போனேன்
நான் சென்ற தவறான வழிகள் அறிந்து இறுதியாக உன் வழி நாடி நிற்கின்றேன்
நான் கேட்கும் ஒரு வாய்ப்பு நல்லது செய்ய வேண்டி
நான் வேண்டுதல் கேட்டு உன்னிடம் நிற்கின்றேன்

யார் அறிவார் நம் நிலை


யார் நல்லவர்
யார் கெட்டவர்
யார் அறிவார்
யாவையும் இறைவனே அறிவான்

நல்லவரை கெட்டவரென்றால் கெட்டவராகலாம்
கெட்டவரை நல்லவரென்றால் நல்லவராகலாம்
மணலில் நல்ல விதைகளை விதைத்தால் நல்லவைகள் கிடைக்கலாம்
மனதில் நல்லதை விதைத்தால் நல்லவராகலாம்!

தவிக்கிறேன் தனிமைப் பட்டதாய்...

தாளாத பாசத்தில் தாய் வீடு போனாய்
தாளாத துயரத்தில் நான் படும் பாடு நீ அறிவாயோ!
பகற்பொழுதும் கனலாய் சுடுகிறது
பனிக் கொட்டும் இராக்காலமும் அனலாய் சுடுகிறது
படிந்துள்ள தூசியை துடைத்து வைப்பாய்
படிந்துள்ள தூசி நாசியை நெருடுகிறது
உன் நினைவில் என் இமைகள் மூடுமோ!

நீ இல்லாத இராக்காலம் கனாவாய் கழிகிறது
நீ இல்லாத இருளில் சுருண்டு கிடக்கிறேன்
நீ கிளப்பிய வேகத்தை
நீ திரும்புவதிலும் வேகத்தைக் காட்டு
நீ இல்லாது மனமும் வெறுச்சோடி போனது
நீ இல்லாத இல்லமும் வெறுச்சோடி போனது
நீ இருக்கும் நேரத்தில்
பசுமையாய் சோலையாய் மனதில் நிற்பாய்
நீ இல்லாத நேரத்தில்
பசுமையற்ற பாலையாய் மனதை வாட்டுகிறாய்

பறவைகலும் மாலை நேரத்தில் கூடு திரும்பும்
பணி செய்யும் பாவையாய் வீடு திரும்பு

Sunday, 22 December 2013

விருப்பமும்(லைக்கும்) கருத்துரையும்


லைக் (விருப்பம் )ஒரு உந்து சக்தி

லைக் கொடுப்பது விருப்பத்தின் அறிகுறி
லைக் மனிதருக்கு மனிதர் வேறுபடும்
லைக் இருந்தும் காட்டிக் கொள்ளாமல் இருப்பது அடக்கம்
லைக் கொடுத்து மாற்றுக் கருத்து வர விரும்பாமல் இருக்கலாம்
லைக் கொடுத்தவர்க்கு நன்றி மனதளவில் வந்து மகிழலாம்
லைக் கொடுத்தவர்க்கு நன்றி சொல்ல விடுபட்டதால் லைக் கொடுத்தவர் மனது வருந்தலாம்
லைக் போட்டுத் தான் ஆக வேண்டும் என்பதை எதிர் பார்ப்பது முறையல்ல
லைக் ஆகும்படி எழுதுவது சிலருக்கு கை வந்த கலை
லைக் கொடுப்பது தெரிந்தவருக்கு மட்டும் கொடுக்கப் படலாம்
லைக் ஆக எழுதியதாக தானே நினைத்து மகிழலாம்
லைக் செய்தால் தான் நண்பன் எனபது நட்பின் அடையாளம் ,நண்பன் செய்வதெல்லாம் லைக் ஆக இருக்க வேண்டிய அவசியமில்லை
லைக் ஒரு தலைக் காதல் போன்றும் இருக்கலாம்
லைக் தனிப்பட்ட ரசனையைப் பொருத்தது
லைக் செய்யாவிட்டாலும் செய்வதனை செய்து லைக் ஆகும் வழியை முயற்சிக்கலாம்
லைக்காண வாழ்க்கை கிடைப்பது கடினம்
லைக்காண வாழ்க்கை கிடைக்க இறைவழி வாழ வேண்டும்
லைக்கான வாழ்க்கை நிரந்தர வாழ்க்கை சுவனத்தில்தான் கிடைக்கும் 

Friday, 20 December 2013

விதி

விதியில்லாதது ஏது
வீதிக்கும் விதியுண்டு
வாழ்விற்கும் விதியுண்டு
சட்டத்திற்கும் விதியுண்டு
மனிதன் போடும் சட்டத்தின் விதியை
மனிதன் நாடும் விதத்தில் மதியால்  மாற்றலாம்
இறைவன் விதித்த விதியை மாற்ற
இறைவனால்தான் முடியும்

இறைவனது விதியை ஆய்வோர்
இரண்டு கால்களையும் தூக்கி முயல்வோர் ஆவார்

வா! வந்து பார் ! வர்ணித்தது போதும்.

கனியென வர்ணித்த கன்னங்கள் குழி விழுந்தன
முத்தென வர்ணித்த பற்கள் சொத்தை விழுந்து சிதறின

கட்டான உடல் கலை யிழந்து போயின
உதிரும் முடியும் நிறம் மாறும் முடியும்
பருவ மங்கையாய் இருந்த தோற்றத்தை மாற்றின
இன்னும் இருக்குமிடத்திலிருந்து வர்ணனை செய்கிறாய்

வா! வந்து பார்!
வரி வரிகளாய் வர்ணித்தது போதும்

நாட்கள் நகர்கின்றன
ஆண்டுகள் பறந்துவிட்டன

பறந்து போன இடம் அடைக்கலமானதோ
இருந்து வாழ்ந்த இடம் நினைவை விட்டு அகன்றதோ

பெண்ணின் பொறுமையால்
என்னின் நிலை அருமை அறியாமல் போனாய்

போனது போகட்டும்
இணைந்தவள் இருக்கிறாள்
இறக்கம் கொண்டு வந்து கண்டு விடு
இணைந்தவள் இறப்பதற்குள்

Thursday, 19 December 2013

தங்கத்தில் தரம் காண வேண்டும்

தங்கத்தை பார்க்க மகிழ்வு .
தங்கத்தை வாங்க முடியாமல் விலை உயர்வு .
தங்கம் நிலவரம் அறிய திகைப்பு

தங்கமான மக்களுடன் கூடிய நட்பு சிறப்பு
தங்கத்தில் சுத்த தங்கமும் உண்டு
தங்கத்தில் கலப்படமும் உண்டு
தங்கமான நட்பாக நினைத்து கலப்படமானது
தங்கமான நட்பு கலப்படமானது அறிய கலங்கியதும் உண்டு

தங்கமான நட்பு கிடைக்க இறைவன் அருளும் வேண்டும்
தங்கமான மக்களுடன் பேசிவதில் மன நெகிழ்வு வர வேண்டும்

தங்கமான நட்பு மனதை ஊக்கு விக்கும்
தரம் கெட்ட நட்பு நம்மை தாழ்த்த நினைக்கும்

தங்கத்தில் தரம் காண வேண்டும்
நட்பிலும் தரம் அறிய வேண்டும்

நட்புக் கரம் நீட்ட தடை செய்ய மனமில்லை

Wednesday, 18 December 2013

சட்டமும் , விதியும் , மார்க்கமும் நகைத்து நிற்கின்றன

அலைகளில் மாட்டித் தடுமாறி தப்பிக்க முயல்வது போல்
அரசியல் சட்டத்தில் மாட்டிக் கொண்டவர் தப்பிக்க முயல்கின்றனர்
அரசியல் சட்டம் அறியாது பிழை புரிந்தவர்
அரசியல் சட்டம் அறியாதது பிழையென பிடி வாரண்டில் பிடிக்கப் படுகின்றனர்
அரசியல் சட்டம் அறிந்தும் பிழை செய்தவர் சட்டத்தின் ஓட்டையை பிடித்து விடுகின்றனர்
அரசியல் அறிவு அற்றோரும் அரசாட்சியில் நுழைந்து விடுகின்றனர்
அரசியல் அறிவு வேண்டாம் அனுபவ அறிவு போதுமென்கின்றனர்

குடும்பம்

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை .
நல்லொதொரு குடும்பம் பல்கலைக்கழகம்
குடும்ப உறவைப் பேணுவது மிக முக்கியமானதாகும்
“யார் அல்லாஹ்வையும், மறுமை நாளையும், ஈமான் கொள்கின்றாரோ அவர் குடும்ப உறவைச் சேர்ந்து நடக்கட்டும்” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இரத்த உறவைப் பார்த்து “யார் உன்னைச் சேர்ந்து நடக்கிறானோ நான் அவனைச் சேர்த்துக் கொள்வேன். யார் உறவைத் துண்டித்துக் கொள்கின்றானோ நான் அவனுடன் தொடர்பைத் துண்டித்து விடுவேன்”

நிறைவாய் உன் அருளைத் தந்தருள்வாய்

விடியல் வருமுன்னே விழிகளில் நீர் பாய்ச்சி
வைகறையில் நீல வானத்தை நோக்கி
விழிகள் நட்சத்திரங்கள் போல் இமைக்க
வழியைப் பார்த்து புத்துணர்ச்சி பெற்று நடை போட
அவனை நேசித்து அவனுக்காக அவனில்லத்தில் தொழுதேன்.

இல்லம் வந்து இனிய தேநீர் அருந்தி
மகிழ்வு தரும் குழ்ந்தைகளுடன் கொஞ்சி விளையாடி
நண்பர்களுக்கு முகநூல் வழி மின்னஞ்சல் செய்து
முகநூலில் அறிந்ததை எழுதி மகிழ்ந்து
சூடான சுவையான சிற்றுண்டி உண்டு
பழ சாறுகள் மற்றும் பானங்கள் அருந்தி
சூட்டோடு செய்து வர வேலைகள் முடிக்க புறப்பட்டேன்

Tuesday, 17 December 2013

எதிலும் அவசரம்

பட்டாம் பூச்சி பறப்பதில் அழகு
பட்டாம் பூச்சி நிறமும் அழகு
பட்டாம் பூச்சி கூடு கட்டுவதும் அழகு
பட்டாம் பூச்சி தன் வேலையை தானே செய்வதும் அழகு

அந்த அழகை கண்டு ரசிப்பதும் அழகு
அது கட்டிய கூட்டில் உள் நுழைவதும் அழகு
அது நுழைந்த கூட்டில் வெளி வராமல் தவித்ததில் வருத்தம்
அது நுழைந்த கூட்டிலிருந்து வெளி வர கத்தரியால் அதன் கூட்டை கத்தரியால் வெட்டி பெரிது படுத்த அது வெளிவர அதன் மீது காட்டிய பரிவில் மகிழ்வு

சேவைக் கொள்கை வாகை சூடட்டும்

தேர்தலில் கூட்டு நாட்டுக்கு கேடு
கொள்கை சேவையோடு சேரட்டும்
கொள்கை தனித்து விளங்கட்டும்
சேவைக் கொள்கை வாகை சூடட்டும்

உணவில் கூட்டு இருப்பின் பிடிப்பு
குடும்பத்தில் கூட்டு இருப்பின் பிணைப்பு
கட்சியில்  கூட்டு குழப்பம்
ஆட்சியில் கூட்டு சந்தர்ப்பம்

பிள்ளையை கிள்ளி விடு பின்பு தாலாட்டு

குடியை தடுக்க விளம்பரம் செய்
குடிக்கும் வியாபாரம் செய்

புகை பிடித்தால் புற்று நோய் வருமென அறிவுறுத்து
புகைப் பிடிக்கும் சிகெரெட் விற்க அனுமதி கொடு
புகைப் பிடிக்கும் சிகெரெட்டுக்கு வரி கூட்டி கஜானாவை பெருக்கு

எட்ஸ் தடுக்க வழி செய்
ஓரினச் சேர்க்கையை அனுமதிக்க சட்டம் வர முயற்சி செய்

Tuesday, 10 December 2013

பிறப்பும் இறப்பும்

சரியான உப்புக் கலவை
சரியான காரக் கலவை
சரியான உணவு
சரியான காலத்தில் திருமணம்
சரியான காலத்தில் குழந்தை
சரியான வளர்ச்சி குழந்தை
சரியான அறிவுக் குழந்தை

சரியான குழந்தையின் கேள்வி 'யார் இறைவன்!'
சரியான புரிதல் இறைவனைப் பற்றி
சரியான புரிதலால் இறைவனை தொழுதல்
சரியான ஒளு(தொழுகையை நிறைவேற்றுவதற்கு முன்பு ஒருவர் தூய்மையான நிலையில் இருத்தல்)
சரியான தொழுதல்

Sunday, 8 December 2013

சொல்லிவிட்டேன் !

என்
மனதுக்குள்
அழுத்தி வைத்ததை
என்னை அறியாமல்
சொல்லிவிட்டேன்.
சொல்லிவிட்டதை
எண்ணி
என் மனம் பதைக்கிறது

நெஞ்சில் உள்ளதை
நெடுநாள் நிறுத்தி வைக்க முடியவில்லை

உன்னிடம் நான் சொல்லிவிட்டேன்
உன்னிடமே உன்னைப் பற்றியதை
ஒளிக்காமல் உன்னிடமே சொல்லிவிட்டேன்
ஒளிவு மறைவின்றி உண்மையை சொல்லிவிட்டேன்

Wednesday, 4 December 2013

வாழ்வை ரசிக்க வேண்டும்

 தன் குஞ்சு பொன் குஞ்சுதான்.

வீட்டில் குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிட வாய்ப்பு கிடைத்தால் அவர்களிடத்து பாசம் அதிகமாகும். அவர்களுக்கும் நம் மீது நேசம் மிகும். வீட்டில் இருக்கும்போது கணினியில் காலத்தை வெகு நேரம் செலவிடாமல் மனைவிக்கு உதவியாக இருக்கும்போது சமைக்கவும் தெரிந்துக் கொள்வது நல்லது. அதனால் மனைவிக்கு வீட்டு வேலை குறையும் .
சமைப்பதில் பொதுவாக பெண்கள் தங்கள் தாயிடம் கற்று வந்த சமையல் முறைதான் (அதிகமான பெண்களுக்குத்) தெரியும். ஆண்கள் அப்படியல்ல. எதிலும் புதுமை காண்பவர்கள்.அதனால் பலவகையில் சமைத்துக் கொடுப்பதில் ஆர்வம் காட்டுவர். சமையல் புதுமையாக இருப்பதால் வீட்டில் அனைவரும் உணவை விரும்பி சாப்பிடுவர்.

Monday, 2 December 2013

அறிவைத் தேடு ஆண்டவனை அறிய

ஆண்டவனை அறிந்தால் ஆண்டவன் காட்டிய வழி நடப்பாய்
ஆண்டவன் காட்டிய வழி நடந்தால் வாழ்வின் மகத்துவம் அறிவாய்

வாழ்வின் மகத்துவம் அறிந்தால் வாழ்வை உயர்வாக்கிக் கொள்வாய்
வாழ்வை உயர்வாக்கிக் கொண்டால் வாழும் வாழ்வு சிறப்பாகி விடும்

வாழ்ந்த வாழ்வு சிறப்பானால் இறைவனது நேசம் கிடைக்கும்
இறைவனது நேசம் கிடைத்தால் சுவனத்தின் வழி கிடைக்கும்

சுவனத்தின் வழி கிடைத்தால் வாழ்ந்த வாழ்வு பரிபூரணமாகிவிடும்
வாழ்ந்த வாழ்வு பரிபூரணமாக்கிவிட்டால் இறைவன் தந்த வாழ்வு நிறைவாகிவிடும்

இறைவன் தந்த வாழ்வை நிறைவாக்கிவிட்டால் இறைவனை அறிந்தவன் ஆனாய்

போராட்டமே வாழ்வாகிவிட்டது


அவர்கள் தங்கள் உயிருக்காக போராடுகிறார்கள்
அவர்கள் மற்றவர்கள் உயிருக்காக போராடுகிறார்கள்
அவர்கள் மற்றவர்கள் நலத்திற்க்காக போராடினார்கள்
அவர்கள் போருக்கு தாங்களே விரும்பி சென்றார்கள்
அவர்கள் போருக்கு கட்டாயத்தின் காரணமாக சென்றார்கள்
அவர்கள் போருக்கே போகாமல் கட்டாயமாக காரணமின்றி அடைக்கப் பட்டார்கள்

அவர்கள் மனைவியர்கள் மனதுக்குள் போராடுகிறார்கள்
அவர்கள் மனைவியர்கள் தங்கள் கணவன் நலமே திரும்ப வேண்டுமென்று போராடுகிறார்கள்
அவர்கள் மனைவியர்கள் தங்கள் கணவன் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென்று போராடுகிறார்கள்
அவர்கள் மனைவியர்கள் தங்கள் கணவன் தங்களிடம் வரவேண்டுமென்று இறைவனிடம் பிரார்த்திக்கின்றார்கள்

Sunday, 1 December 2013

உன் ஆணைக்கு நான் அசைகிறேன்!


உன் ஆணைக்கு நான் அசைகிறேன்
என் ஆட்டத்தை நீ கண்கானிக்கிறாய்

உனை தொழுது நான் வேண்டுகிறேன்
உனை யல்லால் யாரை நான் வேண்டுவேன்!

உயர்வானதை   சேர்க்க உன் உதவி வேண்டும்
உயர்வானதை   சேர்க்க என் கடமையை நான் செய்ய வேண்டும்

Thursday, 28 November 2013

முழுமை எதில் உள்ளது !


 முழுமை எதில் உள்ளது ! முடிவின் இருதியே  முழுமையின்  துவக்கம்.  குறை  இல்லாத மனிதனைப் பார்க்க முடியுமா ! .குறையிலும்   நிறையினைக் காண்பவனே சிறந்தவன் . முழுமையாக கிடைக்கவில்லையயே என ஆதங்கப்படுவதைவிட கிடைத்ததைக் கொண்டு  நிறைவு அடைந்தவன் வாழ்வே மகிழ்வாக அமையக் கூடும் . தாகம்  தீர்க்க நீர் நாடி வேண்டுவோர்  கிடைத்த நீரைக் கொண்டு தாகத்தினை தீர வழி உண்டாக்கிக் கொள்வார்கள் . அதன் வேகம் படிப் படியாக குறைவதனை உணர்வார்கள் . எது தேவைக்கு  அதிகம் கிடைத்தாலும் அதன் மதிப்பு குறைவதனைக் காணலாம் . கடைத்தெருவில் பொருட்கள் அதிகம் வந்து சேர்ந்தாலும்  ஒரு பொருளின் விளைச்சல் அதிகமாகிவிட்டாலும் அதன் மதிப்பு குறைவாக போய்விடும் நிலை என்பது உண்மை . வாழ்வின் தத்துவமும் இதில் அடங்கும் .

Monday, 25 November 2013

நம் மனதில் தெளிவாக எதுவும் பார்க்க முடியும்,

நம் மனதில் தெளிவாக எதுவும் பார்க்க முடியும்,
ஒரு உணர்ச்சியில்லாமல் எதுவும் நம்மை பாதிப்பதில்லை!

ஒரு எழுதி வைத்த பட்டியலை பாருங்கள்
எழுதி வைத்த பட்டியல் காற்றில் பறந்து விட்டது.
எழுதி வைத்த பட்டியல் முழுமையாக நினைவுக்கு வராது

விளையாட்டாக ஒரு பாடலை எழுத முயற்சியுங்கள்!
விளையாட்டாக எழுதிய பாடலுக்கு ஒரு இசையை கொடுங்கள்
விளையாட்டாக இசையுடன் எழுதிய பாடலை பாடுங்கள்
விளையாட்டு வினையாகி மனதில் பதிந்து விட்டதை நினைத்து மகிழுங்கள்

Saturday, 23 November 2013

இனாமுக்கும் மதிப்பு இல்லாத நிலை!


 எனது நண்பர் ஒரு சிறந்த எழுத்தாளர். அவர் எழுதிய கதைகளும், கட்டுரைகளும் ஆய்வுக் கட்டுரைகளும், வழிகாட்டி குறிப்புகளும் பல பத்திரிக்கையில் வந்தது. அதனால் அவருக்கு சிறிது வருமானமும் கிடைத்தது.

அவருக்கு நீண்ட கால ஆசையாக அதனை சேமித்து ஒரு புத்தகமாக வெளியிட விரும்பினார் .

 அந்த விருப்பத்தை நிறைவேற்ற தனது எழுத்துக்களால் கிடைத்த வருமானத்தை வைத்து மிகவும் செலவு செய்து குறைந்த ஆதாயம் வரும் நோக்கத்துடன் ஒரு புத்தமாக வெளியிட்டார். அவர் எதிர்பார்த்தபடி அந்த புத்தகங்களை யாரும் வாங்கவில்லை. அதனால் அச்சிட்ட அந்த அருமையான, அழகிய புத்தகங்கள் தேங்கிக் கிடந்தன. அதனால் அவர் மனம் மிகவும் வேதனை அடைந்தது. இதனை என்னிடம் சொல்லி வருத்தப் பட்டார்.
நான் அவருக்கு சொன்னேன் 'புத்தகங்கள் கரையான் பிடித்து அழிந்து போவதைக் காட்டிலும் அந்த புத்தகங்களை இனாமாக கொடுத்து விடு. மக்கள் படித்து பயன் பெறட்டும். அதனால் உனக்கு நன்மை வந்து சேரும்' என்று

Monday, 18 November 2013

முன்னால் போ, பின்னால் வருகிறேன்.


மேகங்கள் மோதின
இடி இடித்தது
ஒலியை உண்டாக்கியது

இடி இடித்ததால்
மின்னல் ஒளியை தந்தது

இடியின் ஒலி தாமதிக்க
மின்னல் ஒளி முந்திக் கொண்டது

இடிபோன்று ஒலித்த கடஞ் சொற்கள் வேகமாய் தாக்க
இமைகள் துடிக்க விழிகளின் ஒளியை மறைக்க தாமதித்து கண்ணீர் வழிந்தன

Sunday, 17 November 2013

அறியாமையின் நிலை மோசமான நிலை

அறியாமையின் நிலை மோசமான நிலை
இறைவனை அறியும் நிலை உயர்வான நிலை
இறைவனின் ஒளி ஆன்மாவின் அறிதல் நிலை
ஆன்மாவின் ஒளி வழி ஞானத்தை பெறுதல் நிலை

இறைவனின் அருள் இருளைப் போக்கி ஒளியை தருகிறது
இறைவனை அறிதல் ஆன்மீக ஞானம் பெற வைக்கிறது
ஆன்மீக ஞானம் அறியாமையும் மூடநம்பிக்கையும் .போக்குகின்றது
பயத்தை அகற்றி நேர்வழியில் நடை போட வைக்கின்றது

பெண் என்றால் பேயும் நடுங்கும்

பெண் என்றால் பேயும் நடுங்கும்
பெண் என்றால் பேயும் இரங்கும்
பெண் என்றால் பேயும் மயங்கும்
பேய் என்றால் பெண்ணும் பயப்படுவாள்
பேய் என்றால் வக்கிரம் கொண்ட(காம வெறியன்கள்)ஆணாவான்

பேய் என்பது பொய்யானாலும்
பேய் என்பது அச்சம் தரக் கூடியதற்கு உருவகப் படுத்தப் படும்

வக்கிர புத்தி இருபாலர்களுக்கும் உண்டு
அதனால்தான் ஆண் பேய், பெண் பேய் என்கிறார்களோ!

உன் மவுனம் சம்மதமானால்!



உன் மவுனம் சம்மதமானால்
என் கவனம் உன் பக்கம்

உன் மவுனம் உன் விழிகளில் வெறுப்பைக் காட்டினால்
என் கவனம் திசை மாறும்

சொல்லால் சொல்வதை விடுத்து
வார்த்தையால் விளையாடுவதை தவிர்த்து
விழிகளின் பார்வை விளக்கம் கொடுப்பது சிறந்து விடுகின்றது
விழிகள் அத்தனை உணர்வுகளையும் வெளிக் கொண்டு வருகின்றது 

Tuesday, 12 November 2013

சூரிய ஒளியும் நிலா ஒளியும் திடீரென்று குறைவதில்லை

ஓரிடத்தில் அமர்ந்து உலகமெல்லாம் அலைகிறேன்
ஓரிடத்திலும் நிலை கொள்ள முடியவில்லை

அதைப் பார்க்க அங்கே ஓட
இதைப் பார்க்க இங்கே வர

வேண்டியது எங்கும் நிரம்பி கிடைகின்றது
வேண்டியதை இங்கு நிரப்பி வர மனம் நாடுகிறது

ஆசைப்பட்டதை அடைய முயற்சிப்பதற்குள்
அரசாட்சி செய்வோர் அடைய விடுவதில்லை

தேடியதில் கிடைத்த முத்துக்கள் சேர்பதற்குள்
தேடியது கிடைத்த முத்துக்கள் இருள் கவ்வியதால் கை நழுவி போயின

சூரிய ஒளியும் நிலா  ஒளியும் திடீரென்று குறைவதில்லை
மின்சாரம் மட்டும் திடீர் திடீரென்று நின்று போகின்றது

Saturday, 9 November 2013

திருமண விருந்தில் தரப்படும் சிறந்த உணவு பிரியாணியே

சிலர் திருமண விருந்துக்குச் சென்றால் பிரியாணி சாப்பிடுவதில்லை
வெஜிடேரியன் சாப்பிட செல்கிறார்கள் .

அவர்கள் சொல்லும் காரணம் அவர்களுக்கு பிரசர் மற்றும் கொலாஸ்ரால் இருப்பதாக சொல்கிறார்கள் .


பிரியாணியில் சேர்க்கப்படும் மசாலாக்கள் உடலுக்கு நன்மை தரும்
அவர்கள் சாப்பிடுவதற்கு உகந்தது பிரியாணிதான் .பிரசர் மற்றும் கொலாஸ்ரால் உள்ளவர்கள் மட்டும் அதில் உள்ள ஆட்டுக் கறியை நீக்கி விட்டு சாப்பிட வேண்டும் .


வெஜிடேரியன் உணவில் தரப்படும் நெய் ,பருப்பு அவர்களுக்கு உகந்ததல்ல .மற்றும் அந்த உணவில் சோடா உப்பு கலந்திருக்க வாய்ப்பு உண்டு .
வெஜிடேரியன் உணவு ஹோட்டலில் ஆர்டர் கொடுத்து வரவைக்கப் பட்டது . அதில் சேர்க்கப்படும் காய் கறிகளும் உயர்ந்தவையாக இருக்காது .

Thursday, 7 November 2013

ஒரு காரணமுமின்றி ஒன்றையும் இறைவன் படைக்கவில்லை.

ஒன்றிலிருந்து ஒன்று உருவாகிறது .
ஒன்றிலிருந்து ஒன்று உருவாகுவது உயர்வானதாகவும் இருக்கலாம்  .


சுழிக்கு (பூஜ்யம் 0) மதிப்பு இருப்பதனால்தான் சுழியை கண்டு பிடித்தார்கள். ஒன்றோடு சுழி சேர சுழிக்கும் மதிப்புதான்.
எதனையும் ஒதுக்க வேண்டாம். ஆய்வு ,சேர்ப்பு ,மெருகு தர மதிப்பு தானே உயரும்
பூஜ்யத்தை கண்டுபிடித்தது இந்தியர்கள்

அல்ஜிப்ரா என்ற கணித வழக்கு அராபியர்களால் உருவாக்கப் பட்டதாக சொல்வதுண்டு .

அரேபிய புகழ்பெற்ற கணித மேதை அல்-குவரிழ்மி (790 கி.பி. - 850 AD) இந்தியாவுக்கு வந்து ஆய்வு செய்து
 "ஹிஸாப் -அல் ஜாபர், வ -அல்முகாபிலா " (“Hisab-al-jabr-wa-al-muqabilah”)என்ற .பிரபலமான புத்தகம் எழுத  இந்திய எண் முறை இயற்கணிதம் பிரபலமானது.

Friday, 1 November 2013

அடிமையாய் இருப்பதில் சுகம்



ஆணவமாய் வந்தேன் அடங்கிப் போனேன்
வேகமாக வந்தாள் மடக்கிப் போட்டாள்

ஆணவமும் அதிகாரமும் வெளியில்
அடக்கமும் பணிவும் வீட்டில்

வீராப்பும் விவேகமும் வெளியில்
உராய்ப்பும் உணர்வும் வீட்டில்

ஆண்மகனாய் உலாவருவது உலகில்
அடிமையாய் அடங்குவது வீட்டில்

அன்பை ஆயுதமாக்கி அடிமையாக்கவில்லை
காதல் கயிரால் கட்டிப்போடவில்லை

நேச வலையில்  சிக்குண்டேன்
பாசப் பிணைப்பில் இறுக்கமானேன்

காலமெல்லாம் கணவனுக்கு மனைவி அடிமை நிலை வேண்டாம்
நேசத்தால் சேவையால் உயர்ந்த உனக்கு பாசத்தால் அடிமையானேன்

Thursday, 31 October 2013

கிடைத்த நாட்கள் உயர்வானவை



காத்திருந்தேன் காத்திருக்கிறேன் அந்த நாள் வருமென்று
காத்திருந்த நாட்கள் கடந்து போயின காரியம் முடியாமல்
காத்திருக்கும் நாட்கள் வருகையை நோக்கி களைத்தும் போனேன்
காத்திருக்கும் நாட்களை மறந்து கிடைத்த நாட்களை பயன் படுத்தாமல் போனேன்

கிடைத்த நாட்கள் உயர்வானவை
நினைத்த என்ணங்கள் உயர்வானவை

மற்றவர்கள் மாற்றாக நினைப்பார்களோ என செயல் படுத்த வில்லை
மற்றவர்கள் நிறைவாக போற்றி இருப்பார்கள் நான் நினைத்தது நிறைவேற்றியிருந்தால்

திரும்பி வர தகுதியும் திறமையும் இருந்தால் தவிர இருக்கும் இடத்தை விட்டு வெளியேறுவது சிறப்பல்ல.



  கொடுமைக்காரர்களின் தொல்லை அதிகமாக பிறந்த இடத்தையும் வாழ்ந்த இடத்தையும் விட்டு (ஹிஜரத்) வெளியேறியவர்கள் சரித்திரத்தில் நபிகள் நாயகம்ஸல்) அவர்களும் அவர்களை சார்ந்தவர்களும்.

ஆனால் அவர்கள் திரும்பவும் தங்கள் பிறந்த இடத்திற்கும் வாழ்ந்த இடத்திற்கும் வர முடிந்தது

”நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்” என்று கூறுவீராக! (அல்குர்ஆன் 3 : 31)

Wednesday, 30 October 2013

தன்னை உயர்த்திக் காட்டி நிற்பதல்ல சேவை

மல்லிகை மணம் வீசும்
மல்லிகையை முடியில் வைக்க மணம் பரப்பும்

மணம் கொடுக்க மனம் மகிழும்
மனம் மகிழ்வில்லை மல்லிகை சூடி மணம் மகிழ்விக்க
மனம் வாட மற்றவர் மனம் மகிழ மல்லிகை ஏன்

உன் மனதின் வேதனை உனை விட்டு நீங்கும்
மற்றவருக்கு நீ கொடுக்கும் மகிழ்வினால்

நெஞ்சில் ஓர் இறுக்கம் இருப்பதனை இருத்தி வைத்தால்.

பல வார்த்தைகள் ஒரு வரியாகிறது
ஒரு கருத்து பல வரிகளாகிறது

ஒரு கருத்து மனதில் பதிகிறது
பல கருத்துகள் மறந்து போகிறது

ஒரு சொல் உயிரையே மாய்கிறது
ஒரு சொல் உயிரை வாழ வைக்கிறது

வேற்றுமையில் ஒற்றுமை

உங்கள் விருப்பம் வேறு
என் விருப்பம் வேறு

உங்கள் ரசனை வேறு
என் ரசனை வேறு

ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு ரசனை
ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு விருப்பம்

எல்லோரும் ஒரே ரசனை பெற்றிருந்தால்
எல்லோருக்கும் பிரச்சனை

Tuesday, 29 October 2013

சிந்தித்து செயல்படுத்துவதால் சிறப்பு



சிந்திப்பதால் உயர்வு
சிந்தித்து செயல்படுத்துவதால் சிறப்பு

செயல்படுத்தியது ஆற்றல்
செயல்படுத்தியதின் பலன் விளைவு

பல விதைகள் விதைத்து சில செடிகள்
சில செடிகள் பல விதைகள் தந்தன

செடிகளின் இலைகள் உதிர்வது காலத்தின் மாற்றம்
செடிகளின் இலைகள் உதிர்ந்து எருவாகி செடிக்கே பலனை தந்தது

பல சிந்தனைகள் சில சிந்தனைகளை ஊக்கு வித்தன
சில சிந்தனைகள் பல பலன்களை தந்தன

சிந்தனைகள் சிதறாமல் இருக்க ஓர் நிலைப் படுத்தல்
ஓர் நிலைப் படுத்தல் உயர்வுக்கு வழி

Monday, 28 October 2013

சொல்வது உன்னதாய் இருக்கட்டும்

பல வார்த்தைகள் ஒரு வரியாகிறது
ஒரு கருத்து பல வரிகளாகிறது

ஒரு கருத்து மனதில் பதிகிறது
பல கருத்துகள் மறந்து போகிறது

ஒரு சொல் உயிரையே மாய்க்கிறது
ஒரு சொல் உயிரை வாழ வைக்கிறது

அம்பு எய்தவன் மகிழ்கிறான்
அம்பால் அடிப்பட்டவன் மரணிகின்றான்

எயதவனுக்கு நொய்வில்லை (நொய்வு = மனவருத்தம்)

எய்யப்பட்டவனுக்கு வேதனை

சொல்வதை உயர்வாகச் சொல்
சொல்வது உயர்வாய் இருக்க இருபக்கமும் உயர்வு

சொல்வது உன்னதாய் இருக்கட்டும்
சொல்வதில் ஏன் கடன் வாங்கி சொல்கிறாய்

Saturday, 26 October 2013

பிரயாணம் தந்த பாடம்

பெட்டியை சுமந்து சென்றேன் உலகம் சுற்ற
பெட்டியில் சுமை இல்லை
பெட்டியில் இருந்தது பணம் எடுக்கும் வங்கித் தாள்கள்

பிரயான வங்கித்தாள்கள் (Traveler's cheque) போகும் நாட்டுக்கு அனுமதி(விசா) கிடைக்க உதவியது
பிரயானம் செய்த நாடுகளில் தேவையானவைகளை வாங்க வங்கித்தாள்கள்(Traveler's cheque) பணமாக்கப் பட்டு உதவின
பிரயானத்தில் சுமை சுமந்து செல்வது பிரயாண மகிழ்வை கெடுக்கும்
பிரயானம் செல்வது அறிவை உயர்த்திக் கொள்ள உதவ வேண்டும்

தனித்து பிரயாணம் செய்வதால் பல அனுபவங்கள் கிடைக்கும்
தனித்து போனவர் தனியே இருக்க விரும்பாமல் பலரோடு பழக முயல்வார்

Thursday, 24 October 2013

தவறான ஆசைகளை ( Nafs ) அடக்க வேண்டும்

பிறப்பால் முஸ்லீம்
வளர்ப்பால் முஸ்லீம்
இறப்பிலும் முஸ்லீமாக
இருக்க வேண்டும்

கொள்கையால் இஸ்லாமிய வழி
கொள்கை இருக்க நெறி அறிதல் வேண்டும்
அறிதல் இருக்க அதன்படி வாழ வேண்டும்
ஆசைகள் ( Nafs ) வாழும் வழியை தடுமாற வைக்கின்றது
ஆசைகள் பாவங்கள் சேர வைகின்றது
ஆசைகளை அடக்க வேண்டும்

ஆசை பேராசையாக மாறுகிறது
பேராசை அழிவுக்கு வழி காட்டுகிறது
ஆசைப்படுவது நற்காரியங்களுக்கு இருத்தல் வேண்டும்
நற்காரியங்கள் நடைபெற பொறுமை வேண்டும்
பொறுமையற்றவன் போக்கிரியாக மாறலாம்
பொறுமையற்றவன் மார்க்கம் தந்த வழி தவறி செயல்படலாம்


சப்று (பொறுமை) என்றால்
நபி(ஸல்)சொன்னார்கள் :

“அஸ்ஸப்ரு இன்த ஸத்மத்தில் ஊலா “
துன்பம் உள்ளத்தைத் தாக்கிய முதல் நிலையிலேயே மனதை கட்டுப்படுத் வதுதான் பொறுமை “ (திர்மதி)

Wednesday, 23 October 2013

கற்பின் உயர்வு

கற்பு இரு பாலரும் பேணிக் காக்கப் பட வேண்டியது
கற்பின் உயர்வு பார்வையில் மனதில் செயலில் உள்ளடக்கம்
கற்பற்ற செயல் களங்கம் சேர்ந்து நிற்கும்

வெட்கப் படுவதற்கு வெட்கப்படுவது உயர்வு
வெட்கமற்ற வாழ்க்கை வேதனைத் தரும்
வெட்கம் இரு பாலர்க்கும் இருக்க வேண்டும்

உயர்வென்ன தாழ்வென்ன இறைவன் படைப்பில்
உயர்வும் தாழ்வும் செய்யும் செயலில் வெளிப்படும்
உய்ர்வுடையார் கற்றார் தாழ்வுடையார் கல்லாதவர்

நாணம் உடையோர் அகத்தின் அழகு பெற்றோர்
நாணம் உடையோர் தாழ்மைச் செயலை செய்ய நாடார்
நாணயமுடையோர் சொற் வாக்கு தவறார்

வெட்கப்படுவதற்கு வெட்கப்படு.

இன்று ஒரு கட்சி ,நாளை ஒரு கட்சி என்று தன் வேடத்தினை பொருள் நாடி மற்றும் தான் செய்த குற்றத்திற்கு தண்டனை அடைவதற்கு அஞ்சி வாழ்வோர்தான் வெட்கப்படவேண்டும் . அவர்களுக்கே மாலை அணிவித்து காலை வாரி விடும் மக்கள் தான் தன் செயலுக்கு வெட்கப்படவண்டும்

நேர்மையாக வாழும் நாம் ஏன் வெட்கப்படவண்டும் !

புகழ் வந்த பெரியவரைக் கண்டால் ஓடி ஒளிவது அவரை கண்டு பேச வெட்கப்படுவது உனது தாழ்வு மனப்பான்மையின் வெளிப்பாடு.தன்னைப்பற்றியுள்ள தாழ்வு மனப்பான்மை விளைவாக நம்மிடமுள்ள ஆற்றலை வெளிப்படுத்த முடியாமல் உள நோய்கள் வர வாய்ப்பு உண்டாக்கிவிடும் அவருக்கு கிடைத்த புகழுக்கு நீயும் ஒரு காரணமாக இருக்கலாம். பணமும் பதவியும் பகுத்தறிவை கண்டு ஒதுங்கும் . நீ ஒதுங்காதே.

Tuesday, 22 October 2013

நான்

நான் நானாக இருக்க விருப்பம்
நான் நாணயத்தை விரும்புகிறேன்
நான் நாணயத்தை சேர்ப்பது மற்றவர்க்கு உதவ
நான் நாணம் கொண்டவன்
நான் என்ற அகந்தை என்னிடமில்லை
நான் பெற்ற கல்வி மற்றவருக்கு பகிர
நான் வருவதற்கு காரணமான பெற்றோர் மீது பாசம்
நான் வாழ்வதே இறைவனின் அருளால
நான் மகிவாய் இருக்க என் மனைவியின் சேவை அடக்கம்
நான் நல்வாழ்வு வாழ நீங்கள் சிறப்பாய் வாழ வேண்டும் 


 நான் …(About Me)

பெயர்: அ முஹம்மது அலி ஜின்னா, பி. ஏ., பி. எல்., நீடூர்.

அனைத்துப் புகழும் அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்துக் காத்துப் பரிபக்குவப்படுத்தும் நாயனான அல்லாஹ்வுக்கே ஆகும்.

S.E.A.Mohamed Ali (Jinnah)B.A.,B.L., Nidur.

Indeed all the praises are due to Allah, we praise him and we seek his assistance and forgiveness, and we seek refuge in Allah.


சீனாவின் வளர்ச்சி


பல் போனால் சொல் போச்சு . பல காலமாக பல் மருத்துவருக்கு சீன மருத்துவரை நாடி ஓடுவது உண்டு.இப்பொழுது எதற்கு எடுத்தாலும் சீன தேசம் ஓடுகின்றனர் .வாங்குவதற்கும் சீனா,விற்பதற்கும் சீனா என்ற நிலை ஆகிவிட்டது .இரும்புத்திரை உடைக்கப்பட்டு செல்வம் கொழித்து அதிக செலவு செய்யும் நாடாகிவிட்டது. .

சீனா தேசம் சென்றாகினும் சீர் கல்வியைத் தேடு என்று நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் நவின்றார்கள் .இப்பொழுதும் சீனாவின் சிஞ்சியாங் பகுதியில்
முஸ்லீம்கள் அதிகமாக வசிக்கின்றனர்.

இந்தியாவில் கல்கத்தாவில் சீன மக்கள் அக்காலத்திலேயே வந்து குடியேறி பல தொழில்கள் இன்றும் செய்து வருகின்றனர். மக்கள் பெருக்கம் ஆபத்து என்று சொல்லி வந்தவர்கள் சீனாவின் மக்கள் தொகை அவர்களுக்கு சொத்தாகிமாறி வருவதனைக் கண்டு வியக்கின்றனர்

தேவைக்கு பயந்து குழந்தைகளை கொன்றவர்கள் தான் செய்த பாவமான காரியத்தினை உணர ஆரம்பிக்கும் நிலை. உலகில் அதிக மக்கள் தொகை நாடு இந்தியாவும் சீனாவும் தான். இந்த இரண்டு நாடுகள்தான் உலக அளவில் மிகவும் முன்னேறும் நாடாக இப்பொழுது மாறி வருகின்றது.

உயர் ரக அணிகல கற்களை விற்பதற்கு பேங்காக்கிலிருந்து துபாய் ,அமரிக்கா ஓடியவர்கள் இன்று சீனா பக்கம் படை எடுக்கின்றனர் . சீனா செல்வதற்கு விசா முறையும் தளர்த்தப்படுள்ளது . ஆரோக்கியதிற்கு ஒரு சீனா.உழைக்கும் திறனுக்கும் ஒரு சீனா .சீனாவின் வளர்ச்சி பிரமிக்கும் வகையில் மாறும் நிலை .

மென்பொருள் தொழில் வளர்சிக்கு நம் நாடும் அங்கு பல பெரிய தொழில் நிறுவனங்கள் நிறுவ முயற்சி
எடுக்கின்றது. கெட்டும் பட்டணம் போ! என்று சொல்வார்கள். அது இன்று சீனா போய் பணம் தேடு என்றாகிவிட்டது.

திருமணம்

திருமணம் சுவனத்தில் நிச்சயிக்கப் படுகிறது
தாயின் மடியில் சுவனம் இருக்கிறது
தான் விரும்பிய பெண்ணாய் இருப்பினும்
தாயின் விருப்பதிற்கு முதல் இடம் கொடுப்பர்

தாயைப் போல பிள்ளை
நூலைப் போல சேலை
தாயின் குணம் பெண்ணுக்கு இருக்கும்
பெண்ணின் தாய் குணம் அறிந்து பெண் எடுத்தல் சிறப்பு

Monday, 21 October 2013

கனவுகள் கவித்துவம் பெறவில்லை


கனவுகளை கற்பனையோடு கலந்து
கலையாய் கவிதையை வடித்தேன்

குடித்த பாணத்தில் இனிப்பில்லை என்பதுபோல்
படித்த கவிதையில் பிடிப்பில்லை என்றனர்

வாயில் ஊறிய உமிழ்நீர் உண்ட உணவை செரிக்கச் செய்யும்
கவிதை வடிவில் வந்த வரிகள் அறிவு வளரச் செய்யும்

முதல் எழுத்து ஒன்றி வந்து மோனையாகி
இரண்டாம் எழுத்து ஒரே மாதிரி வந்து எதுகையாகி விடும்

கவிதையில் எடுத்து வைத்த எழுத்துகள் அசையாக வில்லை
அசைகளால் எடுத்து வைக்காமல் அது சீர்களாக வில்லை

கனவுகள் கலைந்து வந்தமையால் நினைவில் நின்று சீராகவில்லை
வரிகள் கலைந்து வந்தமையால் நினைவில் நிற்கும் கவிதையாகி சிறப்பாகவில்லை

கவிதையைப் பற்றியது கவிதையல்ல !



கவிதை புனைவது கடினம்
கவிதை என்று எழுதுவது சுலபம்

கவிதை எழுத முதலில் 'க' போடு
கவிதை எழுத நடுவில் 'வி' போடு
கவிதை எழுத இறுதியில் 'தை' போடு

படக் காட்சியில்  வருவது சிங்கார கவிதை
பாடப் புத்தகத்தில் வருவது யாப்புக் கவிதை
காட்சியோடு வரும் கவிதை மனதில் நிற்கும்

பாடப் புத்தகத்தில் வரும் கவிதையை  மனனம் செய்தல் கடினம்
பாடப் புத்தகத்தில் வந்ததை படக் காட்சியில் வந்தால் மனனம் செய்யாமல் மனதில் பதியும்

கவிதை எழுதி பணம் ஈட்டுதல்  கடினம்
கவிதை எழுதி மனம் நிறைவு அடையலாம்
கவிதை எழுதி கவிஞர் பட்டம் பெறலாம்

கவிதை எழுதுதல் ஒரு கலை
கவிதை நெஞ்சத்தில் நின்று விடும்
கவிதை அருவியாய் வரும்

கவிதை உணர்வுகளை தூண்டும்
கவிதை உந்துதல் சக்தியை உருவாக்கும்
கவிதை வைரக் கற்கள் பொதிந்த சங்கிலி

நீ என்னோடு நான் உன்னோடு

நீ என்னோடு இருப்பதாக உணர்கின்றேன்
நீ என்னோடு இருப்பதால் உன் மனம் அறிந்திருக்கின்றேன்
நீ என்னோடு இருப்பதால் உன் மணம் உணர்கின்றேன்
நீ என்னோடு இருப்பதால் நான் உன்னை காதலிக்கிறேன்

நீ என்னோடு இல்லையென்றாலும்
நான் உன் மணம் உணர்கின்றேன்
நான் உன் மனம் அறிகின்றேன்
நான் உன்னை காதலிப்பதால்

வீசும் தென்றல் உன்னைத்  தழுவி கடந்து வருகின்றது
வீசும் தென்றல் என் நெஞ்சை தழுவுகின்றது
வீசும் தென்றல் உன் மணம் தந்து மகிழ்விக்கின்றது
வீசும் தென்றலையும் நான் காதலிக்கிறேன் உன் மணம் வீசுவதால்

Sunday, 20 October 2013

இதுதான் கொலை உலகம் !

ஆயுதங்கள் விற்பனைக்கு பல நாடுகள் போட்டி ! இதுதான் கொலை உலகம் !

நாம் கலை வளர்த்தோம் என்று பெருமை பேசுவோம் . மக்கள் தொண்டே எங்கள் கொள்கை என மார்தட் டிக்கொள்வோம் .

ஆனால் நடப்பது என்ன ?
பதவி வெறி, பண மோகம், மண் ஆசை
ஜாதி,இன வெறி மற்றும் பல தோற்றங்களில் வரும் கொலை வெறி இது தொடர்ந்து வருகின்றது .

இது இந்த நாகரிக உலகத்திலும் பாதிக்க படும் அவல நிலை . எத்தனை புகழ் வாழ்ந்த தலைவர்கள் கொலை செய்யப்பட்டனர். மனிதன் நல்லவன் மக்கள் கொடியோர் என்பர்.

தி மெஸேஜ் திரைப்படம் தமிழில்..


முஹம்மது நபிகளைப்பற்றிய ஆங்கிலத் திரைப்படம் தமிழ் மொழியில் மொழிபெயர்க்கபட்டுள்ளது Part 1 முஹம்மது நபிகளைப்பற்றிய ஆங்கிலத் திரைப்படம் தமிழ் மொழியில் மொழிபெயர்க்கபட்டுள்ளது Part 2 - Part 2 (The End)

Saturday, 19 October 2013

பெண்ணே நீ செய்த குற்றமா !

மாதவிடாய் வந்து ஒதுங்கி நிற்கிறாய்

மலடியாய் பிள்ளை பெறாமல் இருக்கிறாய்

கர்பினியாய் காலம் நிர்ணயிக்கிறாய்

பிரசவமாகி காமப் பசி கணவனை காய வைக்கிறாய்

கணவன் விடுத்து அடுத்தவன நேசிக்க வெறுக்கிறாய்

அழைத்த நேரத்தில் அயராது வேலை செய்த களைப்பில் உறங்குகிறாய்

அழகாக இருக்க அடுத்தவர் மனதை கொள்ளை கொள்கிறாய்

அடுத்தவர் காண அழகை மறைக்க ஆவன செய்கிறாய்

கணவனைக் காண அழகை அழகு படுத்துகிறாய்

எங்கிருந்தோ வந்தாய் !

எங்கிருந்தோ வந்தாய்
என்னுள் புகுந்து விட்டாய்
என்னை அடக்கவும் செய்தாய்
என்னை ஆளவும் செய்தாய்

எனக்கென்று ஒரு கொள்கை
எனக்கென்று ஒரு ஆசை
எனக்கென்று இருந்ததை இழந்து
எனக்கென்று இருந்தது உன் பிடியில்

உண்மை உறைக்க பொய் என்கிறாய்
பொய் உறைக்க உண்மை என நம்புகிறாய்
மை போட்டு என்னை மயக்கினாயோ!
உண்மை உன்னில் அடக்கமோ

உன் கண் அசைப்பில் அடங்கிய என்னை
உன் கண்காணிப்பில் இருக்கச் செய்கிறாய்
உன் போக்கில் நான் இருக்கச் செய்ய
என் போக்கு என்னை விட்டு அகன்றது

தொடங்கி விட்டது பரபரப்பு !

தேர்தல் வந்துவிட்டது
தொகுதிகளுக்கு புதிய வேட்பாளர்
தொடங்கி விட்டது பரபரப்பு
தொகுதிக்கு சரியான வேட்பாளர் இல்லை

வேட்பாளர் மீது உடன்பாடு இல்லை
வேறு வழி இல்லை
வாக்கு கொடுத்து விட்டேன்
வாக்கு சீட்டு போட வேண்டும்

மறந்து போன மதத்தை நினைவு படுத்தினார்
மறந்து போன இனத்தை சீண்டி விட்டார்
இனம் வாழ ஜாதி நிலைக்க இனவெறி வர
மறைவாய் மனதில் ஏற்றி வைத்தார் வேட்பாளர்